பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி - எல பிரதேசத்தில் உள்ள தோவ ரஜமஹா ஆலய ஊர்வலத்தில் கலந்துகொண்ட நடனக் குழுவின் மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் நடன ஆசிரியர் உட்பட பலர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பதுளை பிரதேசத்தில் உள்ள கலை நிறுவனம் ஒன்றின் நடன ஆசிரியை மற்றும் மாணவர்கள் குழுவொன்றே விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 8 மாணவிகளும் 2 மாணவர்களும் அடங்குவதாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பதுளை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் பாலித ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM