கிழக்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவான மோச்சா (Mocha) என்ற மிகப் பாரிய சூறாவளி நேற்று (13) 23.30 மணிக்கு வட அகலாங்கு 17.90 Nக்கும் கிழக்கு நெடுங்கோடு 91.00 Eக்கும் அருகில் மையம் கொண்டிருந்தது.
அது தற்போது வடக்கு - வடகிழக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இந்த சூறாவளி தொகுதியானது இன்று ஞாயிற்றுக்கிழமை (14) நண்பகல் அளவில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியன்மார் கரைகளை கடக்கக்கூடிய சாத்தியம் தென்படுகிறது.
இதனால், வட அகலாங்குகள் 05Nக்கும் 20Nக்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83Eக்கும் 100Eக்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
மேலும், புத்தளத்தில் இருந்து மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஊடாக காலி வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.
இந்நிலையில், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM