தன்னிறைவு பெற்ற குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் யாருக்கேனும் தானம் செய்ய விரும்புவர். அதன்போது வீதிகளில்... அனுதாபத்தை உண்டாக்கும் வகையில் யாரேனும் இவர்களிடம் பிச்சை கேட்டால்... அவர்கள் உடனடியாக மனமுவந்து தானம்/ தர்மம் செய்வர். ஆனால் எம்முடைய ஆன்மீக பெரியோர்களும், ஜோதிட வல்லுனர்களும் உங்களுடைய வாழ்வும்… உங்களின் சந்ததியினரின் வாழ்வும் மகிழ்ச்சியாகவும்... சிறப்பானதாகவும்... ஒப்புயர்வற்றதாகவும் இருக்க வேண்டும் எனில், நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறீர்களோ... அந்த லக்னாதிபதிக்குரிய வகையில்… உங்களுடைய வருவாயிலிருந்து குறிப்பிட்ட சதவீதத்தை தானமாக வழங்க வேண்டும். அதனை கடமைக்காக செய்யாமல், மனமுவந்து செய்தால்... பலன் கிட்டும். கர்மா விலகும். உங்களின் வெற்றிக்கு தடையாக இருக்கும் சூட்சுமமான விடயங்கள் மறையும். வளர்ச்சியும், முன்னேற்றமும் அபரிமிதமாக இருக்கும். உள்ளன்பு உயரும்.
உடனே எம்மில் சிலர்… எந்த லக்னத்திற்கு எத்தனை சதவீதம் என்று தேடாதீர்கள். அவை உங்களின் எண்ணத்தின் அளவிற்கேற்ப… என்று கடந்து செல்கிறோம். ஆனால் எதனை தானமாக அளித்தால்... எம்மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ற ஒரு பட்டியலை வழங்குகிறோம். இதனை மனதில் வைத்து.. மாதந்தோறும் உங்களுடைய உழைப்பின் மூலம் ஈட்டிய வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை தானமாக மனமுவந்து வழங்குங்கள்.
அன்னதானம் - கடன் தொல்லைகள் நீங்கும்.
அரிசி தானம் - முன் ஜென்ம பாவங்கள் விலகும்.
வஸ்திர தானம் / ஆடை தானம் - சுகபோக வாழ்வு அமையும் மற்றும் ஆயுள் விருத்தி கிடைக்கும்.
பால் தானம் - துன்பங்கள் விலகும் மற்றும் மரண படுக்கை அவஸ்தை அகலும்.
நெய் தானம் - உடல் பிணிகள் அகலும்.
தேங்காய் தானம் - எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்.
தீப தானம் - முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்.
தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.
பூமி தானம் - மீண்டும் பிறவா நிலை ஏற்படும்.
பழங்கள் தானம் - மன அமைதி கிட்டும்.
கம்பளி தானம் - வெண் குட்ட நோய் குறிகள் தென்பட்டால், அந்த பாதிப்பிலிருந்து மீளலாம்.
கோ தானம் - பித்ரு கடன் நீங்கும்.
தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.
நெல்லிக்கனி தானம் - அறிவு மேம்படும்.
தங்கம் தானம் - தோஷம் நிவர்த்தியாகும்.
வெள்ளி தானம் - கவலைகள் நீங்கும்.
கோதுமை தானம் - ரிஷி கடன் அகலும்.
எண்ணெய் தானம் - ஆரோக்கியம் கிட்டும்.
காலணிகள் தானம் - பெரியோர்களை அவமரியாதை செய்த பாவம் விலகும்.
குடை தானம் - எண்ணிய எதிர்காலம் உண்டாகும்.
காய்கறி தானம் - குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
பூ தானம் - விரும்பிய இல்வாழ்க்கை அமையும்.
பொன் மாங்கல்ய தானம் - திருமண தடைகள் நீங்கும்.
மஞ்சள் தானம் - சுபிட்சம் கிடைக்கும்.
எள் தானம் - சாந்தி உண்டாகும்.
வெல்லம் தானம் - வம்ச விருத்தி உண்டாகும்.
தண்ணீர் /குடிநீர் தானம் - மன மகிழ்ச்சி கிடைக்கும்.
சந்தன தானம் - புகழ்/ கீர்த்தி கிடைக்கும்.
புத்தக தானம் - கல்வி ஞானம் கிடைக்கும்.
இப்படி ஒவ்வொரு தானத்திற்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு. மீண்டும் நினைவு படுத்துகிறோம்... நீங்கள் தானம் அளித்தால், அதனை நிதானமுடன்... உள்ளன்புடன்... வழங்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் சங்கல்பம் செய்து, நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM