ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதற்கு வழிகள் உள்ளனவா என ஆராய வேண்டும். ஆனால் அதற்கு ரஷ்யா தனது அணுவாயுத உற்பத்திகளை குறைக்க வேண்டுமென்ற நிபந்தனையை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தனது போர் பொறிமுறைகள் ஊடாக உக்ரைன் மற்றும் சிரியாவில் ஏற்படுத்திய யுத்த ஆக்கிரமிப்புகள் காரணமாக, அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை ஏற்படுத்தி கடந்த மாதம் குறித்த தடையை புதுபிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.
இந்நிலையில் ரஷ்யா தனது அணுவாயுத திட்டங்களை குறைத்தால் மாத்திரமே அமெரிக்கா பொருளாதார தடைகளை தகர்க்கும் எனும் நிலைபாட்டை டிரம்ப் வெளிபடுத்தியுள்ளார்.
இருப்பினும் சில நாட்களுக்கு முன் டிரம்ப் தனது அறிக்கையில், அமெரிக்கா அணுவாயுத செறிவுகளை பலப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடியாக ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டினும் ரஷ்ய அணுவாயுத படைகளை பலப்படுத்தும் அறிக்கையை பிறப்பிருந்தார்.
இந்நிலையில் ரஷ்யாவிடம் அமெரிக்கா அணுவாயுத உற்பத்திகளை குறைக்குமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM