30,000 ரூபா சம்பளம் வாங்குபவரிடம் 7 கோடி ரூபா சொத்து: சிக்கலில்  மத்திய பிரதேச மாநில அதிகாரி 

Published By: Sethu

12 May, 2023 | 06:04 PM
image

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மாதாந்தம் 30,000 சம்பளம் பெறும் அரச ஊழியர் ஒருவரிடம் 7 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் இருப்பதை அதிகரிகள் கண்டுபிடித்துள்ளனர். 

ஹேமா மீனா எனும் இவர், மத்திய பிரதேச பொலிஸ் வீடமைப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் ஆவார். 

7 வருடங்களாகவே அவர் சேவையில் உள்ளார். அண்மையில் அவரின் வீட்டில் ஊழல் எதிர்ப்புத்துறை அதிகாரிகள் நடத்திய முற்றுகையின்போது ஹேமா மீனாவின் பெயரிலும் அவரின் குடும்பத்தினரின் பெயரிலும் 7 கோடி இந்திய ரூபா பெறுமியான சொத்துககள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆடம்பர கார்கள் உட்பட 20 வாகனங்கள், 20,000 சதுர அடி காணி, சுமார் 2 டசின் உயர்ரக மாடுகள், 30 இலட்சம் ரூபா பெறுமதியான 98 அங்குல தொலைக்காட்சிப் பெட்டி, ஆகியனவும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுமார் 100 நாய்களும் காணப்பட்டடுள்ளன. 

ஆரம்ப மதிப்பீடுகளின்படி, கண்டுபிடிக்கப்பட்ட சொத்துகளின் பெறுமதி 5 முதல் 7 கோடி ரூபா பெறுமதியானவை எனவும், மேலும் தேடுதல்கள் தொடர்வதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி...

2023-05-29 10:23:44
news-image

மீன்பிடிப் போட்டியில் மீன்களின் உடலுக்குள் உலோகங்களை...

2023-05-26 16:43:05
news-image

களமிறங்கும் ’மோடி மாம்பழம்’ – ஏன்...

2023-05-25 16:38:24
news-image

வவுனியாவில் 8 கால்களுடன் பிறந்த அதிசய...

2023-05-24 14:28:12
news-image

காதலித்த கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்றது...

2023-05-20 12:54:29
news-image

காதல் திருமணம் செய்தவர்களே அதிகளவில்விவாகரத்து கேட்கின்றனர்......

2023-05-19 12:13:33
news-image

30,000 ரூபா சம்பளம் வாங்குபவரிடம் 7...

2023-05-12 18:04:43
news-image

திருடர்கள் பல விதம் ; பாதணிக்கடை...

2023-05-06 11:37:44
news-image

நான் என் வேலையைத்தான் செய்தேன் -...

2023-05-04 14:34:36
news-image

சாரதி மயங்கிய நிலையில் பஸ்ஸை பாதுகாப்பாக...

2023-05-01 13:25:24
news-image

நிர்வாண சூரிய குளியல் உரிமையை  நீதிமன்றத்தின்...

2023-04-28 15:39:17
news-image

"மனிதநேயம் சாகவில்லை” – அயோத்தி திரைப்பட...

2023-04-28 14:04:16