கடவுசீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு இரு வாரங்களுக்குள் புதிய முறைமை

Published By: Digital Desk 3

12 May, 2023 | 05:28 PM
image

(எம்.மனோசித்ரா)

கடவுசீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும். எனவே கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாத எவரையும் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு வர வேண்டாமென அதன் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாதவர்களை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு வர வேண்டாமெனக் கேட்டு;க் கொள்கின்றோம்.

எனினும் உடல் நலக்குறைப்பாடு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணிகளுக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் மாத்திரம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் கடவுசீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும். எனவே புதிய முறைமையின் ஊடாக மிக சுலபமாக கடவுசீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அவசர தேவைக்கான சேவையைப் பெற்றுக் கொள்ள வருபவர்களின் ஆவணங்கள் நுழைவிடத்திலேயே பரிசோதிக்கப்படும். அவற்றின் உண்மை தன்மை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே கடவுசீட்டு வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49