காணாமல் போன யுவதி என சந்தேகிக்கப்படும் பெண்ணின் சடலம் அந்த பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிகல்ல, எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா என்ற 22 வயது யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல்போயுள்ள நிலையிலேயே இவ்வாறு குறித்த பெண்ணின் சடலம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யுவதி தான் பணியாற்றும் மருந்தகத்துக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து சென்றபோதே காணாமல்போனதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கெலிஓயா நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தனது தாயிடம் பஸ்ஸுக்கு நூறு ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு பணி புரியும் இடத்துக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், காணாமல் போன யுவதியை கம்பளை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மகாவலி கங்கை ஓடைகள் உட்பட காடுகளிலும் தேடி வந்த நிலையில், இன்று அங்குள்ள வயல் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM