அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிபதி எச்.எச்.வர்மா உட்பட 68 நீதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை இடைநிறுத்தி வைக்க இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ராகுல் காந்தி, 2019 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்pன்போது, மோடி எனும் பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிவான் ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா (எச்.எச்.வர்மா) ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பினால் ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், நீதிவான் எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்க குஜராத் அரசு பரிந்துரை செய்தது.
இந்த 68 பேரின் பதவி உயர்வையும் எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மூத்த சிவில் நீதித்துறை அதிகாரிகளான ரவிக்குமார் மஹேதா மற்றும் சச்சின் பிரதாப் ராய் மேத்தா ஆகியோர் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா, ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வந்தது.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,'குஜராத்தில் நீதிபதிகள் 68 பேருக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. பதவி உயர்வு பற்றிய வழக்கு விசாரணையில் உள்ள போதே குஜராத் அரசு பதவி உயர்வு அறிவிக்கை வெளியிட்டதற்கு தடை விதிக்கப்படுகிறது.
பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு அளிக்கும் குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரை மற்றும் அரசின் அறிவிக்கை சட்டவிரோதமானது. ஏற்கனவே இருந்த பதவியிலேயே நீதிபதிகள் தொடர உத்தரவிடப்படுகிறது,' எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM