சிஸ்டமிக் லூபஸ் எரித்மடோசிஸ் எனும் தன்னுடல் தாக்கு நோயிற்கான நிவாரண சிகிச்சை

Published By: Ponmalar

11 May, 2023 | 04:20 PM
image

எமது நோய் எதிர்ப்பு மண்டலமே தவறுதலாக எதிர்மறை ஆற்றலாக மாறி எம்முடைய உடலில் செயல்படும் ஆரோக்கியமான செல்கள் மற்றும் திசுக்களை தாக்கி அழிக்கும். இதனை மருத்துவர்கள் ஒட்டோ இம்யூன் டிஸீஸ் என வகைப்படுத்துகிறார்கள்.

இவை எம்முடைய உடல் உறுப்புகளில் நுரையீரல், தோல், மூட்டுக்கள், சிறுநீரகம், ரத்த அணுக்கள், மூளை போன்றவற்றை தாக்கி அழிக்கிறது. இதில் லூபஸ் எனப்படும் தோலைத் தாக்கும் பாதிப்பும் ஒன்று. அதில் முதன்மையானதாக சிஸ்டமிக் லூபஸ் எரித்மடோசிஸ் எனப்படும் பாதிப்பும் ஒன்று.

தற்போது மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் இதற்கு முதன்மையான நிவாரண சிகிச்சை அளிக்கப்படுகிறது என இத்துறை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சோர்வு, காய்ச்சல், முடி உதிர்வு, சூரிய ஒளியில் பயணிக்கும் போது தோல் பாதிப்பு, வாயில் புண், மூட்டுகளில் வலி, தசை வலி, மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, கண்களில் வறட்சி, தலைவலி, குழப்பம், நினைவுத்திறன் இழப்பு, மன அழுத்தம், கை கால் விரல்களில் உள்ள நகங்களில் நிற மாற்றம் ...போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உங்களுக்கு லூபஸ் எனப்படும் தன்னுடலா தாக்குதல் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அறிந்து கொள்ளலாம். இத்தகைய அறிகுறிகள் வேறு நோய்க்கான அறிக்கறிகளுடன் ஒத்திருப்பதால், இதனை துல்லியமாக அவதானிப்பதற்கு பிரத்யேக குருதி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதனுடன் தோல் மற்றும் சிறுநீரக திசு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பரிசோதனைகளுக்குப் பிறகு அறிகுறிகளின் தன்மைக்கு ஏற்ப மருத்துவர்கள் மருந்து மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை வழங்கி முதன்மையான நிவாரண சிகிச்சையை வழங்குவர். மேலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் உயர் குருதி அழுத்த பாதிப்பும் இருந்தால்.., அதனையும் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை அவசியம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

டொக்டர் ஷாம்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

2025-03-25 15:50:06
news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18