சாரதி அனுமதிப்பத்திரமின்றி பஸ் வண்டியை செலுத்தியவர் கைது

Published By: Digital Desk 3

11 May, 2023 | 12:43 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சாரதி அனுமதிப்பத்திரமின்றி கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி இ.போ.ச. பஸ் வண்டியை செலுத்தியவரை கொழும்பு  - கண்டி பிரதான வீதியின் பஸ்சியால பகுதியில் நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை போக்குவரத்து சபையின் ஜா-எல டிப்போவுக்கு சொந்தமான குறித்த பஸ் வண்டியை, அஜாக்கிரதையாக செலுத்துவதை அவதானித்த, நிட்டம்புவ போக்குவரத்து பிரிவு பொலிஸார் பஸ் வண்டியை வழிமறித்து, சோதனையிட்டபோது  சாரதி அனுமதிப்பத்திரமின்றி, பஸ் வண்டிய செலுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பஸ் வண்டியை பொலிஸார் கைப்பற்றியதுடன், அதிலிருந்து பயணிகள்  வேறொரு பஸ் வண்டிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

நேற்று(10) பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், பஸ் வண்டியை பொலிஸார் கைப்பற்றியதுடன், அனுமதிப்பத்திரமின்றி பஸ் வண்டியை செலுத்தியவரையும் கைது செய்திருந்தனர்.

கைது  செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51