சுற்றாடல் அமைச்சர் செய்னுல் ஆப்தீன் நசீர் அஹமட் இலங்கை - சவுதி அரேபிய நட்புறவு சங்கத்தின் தலைவராக வியாழக்கிழமை (11) தெரிவுசெய்யப்பட்டார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நல்லுறவை பலப்படுத்தவும் வரலாற்று ரீதியான தொடர்பு, சமூக கலாசார மற்றும் வர்த்தக ரீதியிலான பிணைப்புக்களை வலுப்படுத்தவும் இதன் மூலம் வழி பிறக்கும் என நம்பப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியாகப் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் நஸீர் அஹமட் ஒரு பொறியியளாலர் மட்டுமன்றி ஒரு ஹாபிஸாகவம் விளங்குகிறார்.
மேலும் வடக்கு- கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பணியில் தீவிரமாக செயற்பட்டு வரும் இவருக்கு இப்பதவி ஒரு வரப்பிரசாதமாக அமைவதுடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள அரபுலகுடனான உதவிகளையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையலாம்.
இரு நாடுகளின் சுற்றாடல் துறை, காலநிலை என்பன தொடர்பான அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள வழி பிறக்கும் எனவும் நம்பப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM