புதையல் தோண்ட முற்பட்ட 9 பேர் கைது

Published By: Vishnu

11 May, 2023 | 12:54 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹசலக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடத்தவ காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 35, 38, 51 மற்றும் 57 வயதுடைய படமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

ஹசலக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேருவாவில காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டுவதற்கு இயந்திரங்கள் மூலம் பரிசோதித்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 40 ,45, 47 மற்றும் 54 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் மீரிகம, கம்பஹா, புலத்சிங்கள,கொடுகொட மற்றும் எலபொத பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.சேருநுவர  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணாமல் ஆக்கப்பட்ட – சிறையில் வாடும்...

2026-01-20 18:23:06
news-image

சீன நிறுவனம் கோரிய 980 மில்லியன்...

2026-01-20 17:39:42
news-image

நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும்...

2026-01-20 18:18:44
news-image

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர...

2026-01-20 15:36:04
news-image

கல்வி அமைச்சின் விசாரணை குழுவின் பரிந்துரைக்கமையவே...

2026-01-20 17:56:02
news-image

வேலை நிறுத்த போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு...

2026-01-20 15:30:16
news-image

வாகன இறக்குமதி தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ள...

2026-01-20 17:53:13
news-image

யாழில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைபொருட்கள் விற்பனைக்கு...

2026-01-20 22:07:52
news-image

அரசாங்கத்தின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது ; அஜித்...

2026-01-20 19:45:23
news-image

புதிய கல்விக் கொள்கைக்கு நாங்கள் எதிர்ப்பு...

2026-01-20 14:41:22
news-image

மலையக சமூகத்தின் காணி, வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதை...

2026-01-20 17:40:20
news-image

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது...

2026-01-20 14:37:38