முட்டையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா?

Published By: Ponmalar

11 May, 2023 | 11:06 AM
image

காய்கறிகள், பழங்கள், மிதமாகும் உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ் வகைகள் என பல வகையான பொருட்களை நாம் இப்போதெல்லாம் குளிர்சாதனப் பெட்டியில்தான் அடைத்து வைக்கின்றோம்.

அந்த வகைகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது, பால் மற்றும் முட்டை. இவை இரண்டையும் வைப்பதற்கு கிடைத்த வரமாகவே குளிர்சாதனப்பெட்டியை பார்க்கிறோம்.

அதற்காகவே, பால் முட்டை வைப்பதற்கு என்று தனி இட ஒதுக்கீடும் குளிர்சாதனப் பெட்டியில் உண்டு. ஏனென்றால், குளிர்சாதன பெட்டியில் முட்டையை வைத்து பயன்படுத்தினால் 7 முதல் 10 நாட்கள் கெடாமல் இருக்கும்.

இதுவே வெளியில் வைத்து அப்படியே பயன்படுத்தினால் 3 முதல் 4 நாட்களில் கெட்டுவிடும். எனவேதான் முட்டையை பெரும்பாலும் வாங்கிவந்தவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகிறோம்.

முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா..? கூடாதா..? என்பதை பற்றி நாம் அறியாமலே ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கிறோம். ஆனால், உண்மையில் முட்டைகளை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைப்பது மிகவும் ஆபத்தானது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஏனென்றால், முட்டையின் மேல் ஓடுகளில் சால்மோனெல்லா என்கிற பக்டீரியாகக்கள் படிந்திருக்கும். இந்த சால்மோனெல்லா பக்டீரியா விலங்குகளின் குடலில் வாழக் கூடிய ஒரு வகை நல்ல பக்டீரியாவாகும்.

ஆனால், இது விலங்குகளின் உடலை விட்டு வெளியே வந்துவிட்டால், மனிதனுக்கு தீங்கை விளைவிக்கும். இவை முட்டையின் மேல் ஓட்டிலும், உட்பகுதியில் இருக்குமாம். உள்ளிருக்கும் பக்டீரியா, முட்டையை நாம் வேக வைத்தோ, பொரித்தோ சாப்பிடும்போது அந்த சூட்டில் இறந்து விடும். அதனால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

ஆனால், முட்டை மேல் ஓட்டில் படிந்திருக்கும் இந்த பக்டீரியா, பயன்படுத்தும் வரை உயிரோடுதான் இருக்கும். அதுபோன்று, சாதாரண அறையின் தட்ப வெப்பநிலையில் இருக்கும்போது இந்த பக்டீரியாவால் இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை.

அதுவே, குளிர்ந்த ஈரப்பதம் மிக்க தட்பவெப்ப நிலையில் இந்த சால்மோனெல்லா பல மடங்கு பெருக்கம் அடைகிறது. எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து உடனே சமைக்கும்போது, இது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. எனவே முட்டையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவதே சாலச்சிறந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right