மதீஷவின் துல்லிய பந்துவீச்சால் சென்னை வெற்றி ; 'என்னை ஓடவிடாதீர்கள்' என்கிறார் தோனி

Published By: Digital Desk 3

11 May, 2023 | 10:07 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண 3 விக்கெட்களை வீழ்த்தி டெல்ஹி கெப்பிட்டல்ஸை 140 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியதால் சென்னை சுப்பர் கிங்ஸ் மிகவும் அவசியமான நிகர ஓட்ட வேகத்துடன் 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (10) இரவு நடைபெற்ற இப் போட்டியில் மிகவும் இக்கட்டான கட்டங்களில் மனிஷ் பாண்டே உட்பட 3 முக்கிய விக்கெட்களை மதீஷ் பத்திரண கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் 15 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ப்ளே ஓவ் சுற்றுக்கு முன்னேறுவதற்கு சென்னைக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படுகிறது. முதலாம் இடத்தில் இருக்கும் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸுக்கு ஒரு புள்ளி தேவைப்படுகிறது.

இந்த வருட ஐபிஎல் போட்டிகளின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக 5 தோல்விகளைத் தழுவிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ், சென்னையில் தனது 7ஆவது தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக பெரும்பாலும் ப்ளே ஓவ் சுற்று வாய்ப்பை டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இழக்கும் என கருதப்படுகிறது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த மொத்த எண்ணிக்கையில் ஷிவம்  டுபே அதிகபட்சமாக 25 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் அணித் தலைவர் எம். எஸ். தோனி உட்பட 6 வீரர்கள் 20 ஓட்டங்களை எட்டினர்.

தோனியும் ரவிந்தர ஜடேஜாவும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 38 ஓட்டங்களே அணியின் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்து மொத்த எண்ணிக்கைக்கு ஒரளவு வலுசேர்த்தது.

தோனி 9 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவற்றில் 16 ஓட்டங்கள் பவுண்டறிகள் மூலம் வந்தன.

'இதுதான் எனது பணி. இதைத் தான் நான் செய்வேன் என அவர்களிடம் (அணியினரிடம்) நான் கூறியுள்ளேன். என்னை அதிகமாக ஓட விடவேண்டாம் எனவும் அவர்களிடம் கூறினேன். அது நிறைவேறிவருகிறது' என போட்டி முடிவில் 41 வயதான தோனி கூறினார்.

'இதைத் தான் நான் செய்ய விரும்புகிறேன். எனது பங்களிப்பையிட்டு மகழ்ச்சி அடைகிறேன்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையினால் நிர்ணியக்கப்பட்ட 168 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

4ஆவது ஓவரின் முதல் பந்தில் 3ஆவது விக்கெட்டை இழந்தபோது டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மனிஷ் பாண்டேயும் ரைலி ருசோவும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து சென்னைக்கு சவால் விடுத்தனர்.

ஆனால், மதீஷ பத்திரண வீசிய மிகவும் அற்புதமான யோர்க்கர் பந்தில் மனிஷ் பாண்டே எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்ததும் சென்னைக்கு உயிர் வந்தது. தொடர்ந்து அக்சார் பட்டேல், லலித் யாதவ் ஆகியோரின் விக்கெட்களையும் மதீஷ பத்திரண வீழ்த்த சென்னையின் வெற்றி உறுதியாயிற்று.

ரைலி ருசோவ் அதிகபட்சமாக 35 ஓட்டங்களைப் பெற்றார்.

எண்ணிக்கை சுருக்கம்

சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 167 - 8 விக். (ஷிவம் டுபே 25, ருத்துராஜ் கய்க்வாட் 24, அம்பாட்டி ராயுடு 23, அஜின்கியா ரஹானே 21, ரவிந்த்ர ஜடேஜா 21, எம்.எஸ். தோனி 20, மிச்செல் மார்ஷ் 18 - 3 விக்., அக்சார் பட்டேல் 27 - 2 விக்.)

டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 140 - 8 விக். (ரைலி ருசோவ் 35, மனிஷ் பாண்டே 27, அக்சார் பட்டேல் 21, மதீஷ் பத்திரண 37 - 3 விக்., தீப்பக் சஹார் 28 - 2 விக்,)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வலுவான...

2024-11-04 21:33:19
news-image

பாகிஸ்தானை பிரமிக்கவைத்த பெட் கமின்ஸின் துடுப்பாட்டம்;...

2024-11-04 18:17:29
news-image

இந்தியாவை நியூஸிலாந்து முழுமையாக வெற்றிகொண்டதை அடுத்து...

2024-11-04 15:18:09
news-image

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள்...

2024-11-04 13:52:25
news-image

ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட்டில் தோல்வி...

2024-11-03 17:18:59
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக...

2024-11-03 13:45:47
news-image

இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி அசத்திய...

2024-11-03 17:15:39
news-image

ஹொங் கொங் சிக்ஸஸ்: நேபாளத்தை கால்...

2024-11-03 01:28:55
news-image

ஜடேஜா, அஷ்வின் ஆகியோரின் சுழற்சிகளில் நியூஸிலாந்து...

2024-11-03 01:23:28
news-image

ஹொங் கொங் சிக்ஸஸ் கிண்ண பிரிவுக்கான...

2024-11-01 20:09:44
news-image

இந்தியா - நியூஸிலாந்து கடைசி டெஸ்ட்:...

2024-11-01 23:12:32
news-image

இலங்கை - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர்...

2024-11-01 17:08:28