உடற்பயிற்சி நிலையத்தில் வீரரொருவர் அதிக நிறையுடைய பளு தூக்கிய போது முள்ளந்தண்டு இரண்டாக உடைந்த சம்பவத்தின் வீடியோவாக பதிவு இணையத்தில் வெளியாகி உடற்பயிற்சி பயிற்சி ஆசையில் இருப்பவர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் ஒருவர்  உடற்பயிற்சி நிலையத்தில் அதிக எடையுடன் இருக்கும் பளுவை தூக்க முயற்சிக்கும் வேளையில் பளுவை தூக்கி நிமிர்ந்து நிற்கும் போது திடீரென கீழே போடுகிறார். பின்னர், அப்படியே சரிந்து கீழே விழுகிறார்.

பின்னர், மேற்கொண்ட வைத்திய பரிசோதனையில் அவரின் முதுகெலும்பு இரண்டாக உடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.