இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மே 20-ஆம் திகதிக்குள் விடுவிக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாரிய போராட்டம் வெடிக்கும் என இராமநாதபுரம் மீனவ சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என குறிப்பிட்டுள்ள சங்கத்தின் செயலாளர் இது தொடர்பான மகஜரை இந்திய மத்திய அரசின் அதிகாரிகளிடம் கையளிப்பதற்காக தமிழக முதலமைச்சரிடம் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 65 மீனவர்களைத் தவிர, 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 130 இந்திய மீன்பிடிக் கப்பல்கள் இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்த சங்கம் தமது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்தப் படகுகளுக்காக இலங்கை அரசிடம் இருந்து படகொன்றுக்கு 5 லட்சம் இந்திய ரூபாவினை இழப்பீடாக பெற்று கொடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தினால் பொது ஏலத்தில் விற்கப்படும் இந்திய மீனவர்களின் படகுகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தில் இந்திய மீனவர்களுக்கு எவ்வித பணமும் கிடைக்க பெறாதது பெரும் அநீதி என மீனவ சங்கத்தின் செயலாளர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM