bestweb

நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Ponmalar

10 May, 2023 | 05:22 PM
image

‘பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் காவிய நாயகனான ராமபிரானாக நடித்திருக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்திய திரையுலகில் முதுன்முறையாக இப்படத்தின் முன்னோட்டம் இலங்கை, இந்தியா உள்ளிட்ட எழுபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரே தருணத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டு, சாதனை படைத்திருக்கிறது. 

பொலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த 'ஆதிபுருஷ்' படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னி சிங்,தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சஞ்சித் பல்ஹாரா- அங்கீத் பல்ஹாரா இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காவிய படைப்பான 'ஆதி புருஷ்' படத்தை டி சீரீஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் மற்றும் யுவி கிரியேசன்ஸின் பிரமோத்- வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.

'ஆதிபுருஷ்' படத்தின் முன்னோட்டம் ஆன்மீக உணர்வுகளுக்கு அற்புதமான விருந்தாக அமைந்திருக்கிறது. பிரமிக்க வைக்கும் காட்சிகள்... வியப்பிலாழ்த்தும்  காட்சிகள் மற்றும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நட்சத்திர நடிகர்கள் திரையில் தோன்றுவதால்... இந்த பிரம்மாண்டமான படைப்பு பார்வையாளர்களை மாயாஜால மற்றும் புராண உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. வசீகரமிக்க கதைக்கு நம்பகத் தன்மையுடன் கூடிய பிரம்மாண்டத்தை இணைத்து.. இந்திய வரலாற்றில் மறக்க இயலாத ஒரு பொன்னான அத்தியாயத்தை 'ஆதிபுருஷ்' படைத்திருக்கிறது. 

ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடைபெற்ற ஆதி புருஷ் பட முன்னோட்ட வெளியீட்டு விழழ நிகழ்வில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்குபற்றி சிறப்பித்தனர். உயர்தரமான காட்சி மொழிகள்.... பிரம்மாண்டமான அரங்குகள்... அடர்த்தியான திரைக்கதை மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன் கூடிய 'ஆதிபுருஷ்' படத்தின் முன்னோட்டம், உலகில் உள்ள பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது என்பதால் இப்படத்தின் முன்னோட்டம் வெளியானவுடன் இணையத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right