மீண்டும் மாதவனுடன் இணையும் மீரா ஜாஸ்மின்

Published By: Ponmalar

10 May, 2023 | 04:09 PM
image

மாதவன் - மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் 2002 ஆம் ஆண்டில் வெளியான 'ரன்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாதவன் நடிக்கும் 'தி டெஸ்ட்' எனும் படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தயாரிப்பாளரான சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'தி டெஸ்ட்'. இந்த திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் நட்சத்திர பட்டியலின் வரிசையில் நடிகை மீரா ஜாஸ்மினும் இடம் பிடித்திருப்பதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

விராஜ் சிங் கோஹில் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.

ஐந்து நாள் நடைபெறும் துடுப்பாட்ட விளையாட்டு போட்டியை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது

இதனிடையே படக்குழுவினரோடு நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்திருப்பதும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தமிழில் மீண்டும் நடிக்கவிருப்பதும், 'ரன்' படத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் அவர் நடிப்பதும்.. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right