திருமண தடை விலகுவதற்கான பிரத்தியேக பரிகாரம்

Published By: Ponmalar

10 May, 2023 | 01:54 PM
image

தற்போதைய தமிழர்களின் வாழ்வில் திருமணம் என்பது பெற்றோர்கள் நிச்சயித்து நடைபெறும் திருமணத்தின் எண்ணிக்கையை விட, மணமகனும் மணமகளும் திருமணத்திற்கு முன்பே சந்தித்து, காதலித்து, பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெறும் திருமணத்தின் எண்ணிக்கை தான் அதிகமாகி வருகிறது.

மனமொத்த தம்பதிகளின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றால்.. இன்றைய சூழலில் ஜோதிடத்தின் உதவியுடன் பெற்றோர்கள் நிச்சயம் திருமணத்தின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைந்து, காதல் திருமணம் அதிகரித்திருக்கும். ஆனால் அது போன்றதொரு நிலை ஏற்படவில்லை.

மேலும் எம்முடைய நீதிமன்றங்களில் மணமுறிவுக்கான விவாகரத்து கோரும் தம்பதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் பல பெண்கள் முதிர்கன்னிகளாக இருந்தாலும் தங்களுடைய பெற்றோர்கள் நிச்சயிக்கும் மணமகனை தான் கரம்பிடிப்பேன் என காத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஏற்படும் திருமண தடை குறித்த பரிகாரத்தை ஜோதிட நிபுணர்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்கள். மேலும் திருமண தடை ஏற்பட்டால், அது தொடர்பாக ஜோதிடர்கள் வலியுறுத்தும் பரிகாரத்தை... அவர்கள் குறிப்பிடும் ஆலயத்திற்கு.. குறிப்பிட்ட தருணத்தில் சென்று.. நம்பிக்கையுடன் மேற்கொண்டால் தான் அந்த தடை அகலும்.

மேலும் திருமண தடையை எதிர்நோக்கி இருக்கும் மணமகனோ அல்லது மணமகளோ ஜோதிட நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஆலய பரிகாரங்கள், வாழ்வியல் பரிகாரங்கள், தாந்த்ரீக பரிகாரங்கள் ஆகியவற்றை அயராது முழு நம்பிக்கையுடன் மேற்கொண்டால் தடை விலகி, திருமணம் நடைபெற்று இல்லற வாழ்க்கை இனிமையுடன் நீடிக்கும்.

இதற்கு முன் ஜோதிடர்கள் திருமண தடையை நீக்குவதற்காக பரிகாரங்களை சொல்லி நீங்கள் மேற்கொண்டிருந்தாலும், தற்போது சொல்லவிருக்கும் பரிகாரத்தை பெண்களும், ஆண்களும் மேற்கொண்டால் திருமண தடை விலகி, திருமணம் நடைபெறும்.

திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று அல்லது அருகில் இருக்கும் அரச மரத்தடி விநாயகரை தரிசித்து, 'திருமணம் எந்தத் தடையுமின்றி நடந்தேற வேண்டும்' என மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டு, ஒரு தேங்காயினை அருகம் புல்லுடன் வைத்து பிரார்த்திக்க வேண்டும். நீங்கள் பிரார்த்தனை செய்து முடித்தவுடன் முதல் நாளன்று ஒரு தேங்காயை சூரைக்காய் அல்லது சிதறு காய் அடிக்க வேண்டும்.

தொடர்ந்து இரண்டாவது நாள் அதே நேரத்திற்கு மீண்டும் பிரார்த்தனை செய்து கொண்டு இரண்டு தேங்காயை சிதறு காய் அடிக்க வேண்டும். 

இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாள் மூன்று தேங்காயையும், நான்காவது நாள் நான்கு தேங்காயையும், ஐந்தாவது நாள் ஐந்து தேங்காயையும், ஆறாவது நாள் ஆறு தேங்காயையும், ஏழாவது நாள் ஏழு தேங்காயையும், எட்டாவது நாள் எட்டு தேங்காயையும், ஒன்பதாவது நாள் ஒன்பது தேங்காயையும் சிதறு காய் அடித்து பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது நாளான இறுதி நாளன்று விநாயகருக்கு அபிஷேகங்கள் செய்து, அர்ச்சனை செய்து, ஏதேனும் இனிப்பு தின்பண்டங்கள் மற்றும் தயிர் சாதத்தை நெய் வைத்தியம் செய்து, பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். பிரார்த்தனைக்குப் பிறகு அதனை தானமாக வழங்கி விட வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய திருமணத்தடை விலகி, குறுகிய கால அவகாசத்திற்குள் நீங்கள் எதிர்பாராத வகையில் திருமணம் கோலாகலமாக நடந்தேறும்.

தகவல் : திருப்பதி ராஜா
தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35
news-image

கல்வியில் இருக்கும் தடையை அகற்றுவதற்கான சூட்சும...

2025-03-10 16:53:16
news-image

2025 ராகு - கேது பெயர்ச்சிப்...

2025-03-10 14:37:26
news-image

நிம்மதி ஏற்படுவதற்கான சூட்சம பரிகாரம்..!?

2025-03-09 13:12:58
news-image

ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவும் இதிகாச பாராயண...

2025-03-07 17:56:13