ரயில் நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து ரயில் பாதைகளிலும் புதன்கிழமை (10) காலை திட்டமிடப்பட்ட ஐந்து அலுவலக ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரயில் நிலைய அதிபர்கள் சங்கத் தலைவர் தெரிவிக்கையில், புதன்கிழமை (10) நள்ளிரவு வரை அடையாள வேலை நிறுத்தம் தொடரும் என கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நானுஓயாவிலிருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த கடுகதி ரயில் இன்று சேவையில் ஈடுபடாது.
இன்று அதிகாலை 3.55 மணிக்கு கணேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை வரை இயக்கப்படவிருந்த அலுவலக ரயில் சேவையில் ஈடுபடாது.
மற்றைய ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM