பொலிஸாரைக் கடுமையாகத் தாக்கிய குற்றத்தின் பேரில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று ஷைதி இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது பஹ்ரேன் அரசு!
குறித்த இளைஞர்கள் மூவரும் பஹ்ரேன் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். இவர்கள் மூவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும், இவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் சித்திரவதையின் பேரிலேயே சாட்சியமளித்தனர் என்றும் மனித உரிமை இயக்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை அலட்சியம் செய்த அரசு, கடந்த ஞாயிறன்று இந்த மூன்ற இளைஞர்களையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றியது.
பஹ்ரேனில் ஏற்பட்ட அசாதாரணச் சூழல்கள் 2011ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, முதன்முறையாக இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து ஷைதி இனத்தவர்கள் போராட்டம் நடத்தியபோதும், பொலிஸார் அந்தப் போராட்டத்தைத் தடை செய்துவிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM