காலி முகத்திடல் போராட்டகாரர்களை கர்ம வினை தொடர்கிறது - ரோஹித அபேகுணவர்தன

Published By: Vishnu

09 May, 2023 | 10:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

காலி முகத்திடல் போராட்டகளத்தில் முன்னிலையில்  இருந்து செயற்பட்டவர்களை கர்ம வினை துரத்திக்கொண்டிருக்கின்றது.மக்களை தவறாக வழிநடத்திய  போராட்டக்காரர்கள் பலர் இறந்துகொண்டு இருக்கின்றனர்.

களுத்துறையில் சில நாட்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவராவார் என  பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற  ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

காலி முகத்திடல் போராட்ட களத்தில் பல்வேறுபட்ட நபர்கள் இருந்தனர். அங்கு கூடாரங்களை அமைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு பெயரிட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் எமது எதிரியாக இருந்தாலும் அவருக்கு ஏதேனும் அனர்த்தம் நடந்தால் அது தொடர்பாக மகிழ்ச்சியடையக் கூடாது.

இந்த பௌத்த தேசத்தில் இயற்கையாக சில சம்பவங்கள் நடப்பது தொடர்பில் கேட்க முடிகின்றது. அங்கு பந்தமேந்தி மந்திரம் ஓதி செயற்பட்ட பூசாரி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துள்ளார். அதேபோன்று அங்கிருந்த நூலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெசாக்கின் போது கறுப்பு நிறத்தில் வெசாக் கூடு செய்தவர் இப்போது பைத்தியக்காரர்களின் மருத்துவமனையில் உள்ளார்.

இந்த போராட்டத்தில் முக்கியமாக இருந்த ஒருவர் தெஹிவளை பகுதியில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். இன்னுமொருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். இதேவேளை மகிந்த ராஜபக்‌ஷவுக்கு மரண போஸ்டர் அச்சிட்டவர் லங்கா வைத்தியசாலையில் மரணித்துள்ளார். இதுதான் கர்ம வினையால் கிடைப்பவை.

இதேவேளை ஜனாதிபதியின் கொடியை திருடிச் சென்ற தொழிற்சங்க பிரதானி விபத்தில் காலொன்றை இழந்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் அதுகோரல கொலையுடன் தொடர்புடைய ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளார். இவை இந்த ஒரு வருடத்திற்குள் நடந்தவை. கர்ம வினையின் பலன்களை இப்போது காணக்கூடியதாக உள்ளது.

இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.களுத்துறை நகரில் 16 வயது சிறுமி  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்துடன் பிரதான சந்தேக நபர் போராட்டத்தின் களுத்துறை மாவட்ட ஏற்பாட்டாளர். இவர் இரண்டு திருமணங்களை முடித்தவர். இவர் போராட்டத்தின் பிரதான நபராவார்.போராட்டத்தின் உண்மை தன்மையும்,போராட்டகாரர்களின் சுயரூபத்தையும் மக்கள் தற்போது நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.கர்மவினை தொடரும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36