எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம் தொடர்பான பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 

கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட 12 பேருக்கு பிரசவம் நடைபெற்று முடிந்துள்ளதோடு, பிரசுவிக்கப்பட்ட குழந்தைகள் எவரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படவில்லை எனவும் சிசிர லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.