முந்நூறு கோடியை வசூலித்த 'பொன்னியின் செல்வன் 2'

Published By: Ponmalar

09 May, 2023 | 03:16 PM
image

மணிரத்னம் இயக்கத்தில் தயாரான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம், வெளியான பத்து நாட்களில் இதுவரை உலகளவில் 300 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' எனும் நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படங்களை உருவாக்கினார்.

இதில் சியான் விக்ரம் ஐஸ்வர்யாராய் பச்சன் கார்த்தி ஜெயம் ரவி திரிஷா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தில் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியானது. படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாயை வசூலித்ததாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது படம் வெளியாகி 10 நாட்களுக்குப் பிறகு உலகளவில் 'பொன்னியின் செல்வன் 2' 300 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம், இதுவரை 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதால், இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் என திரையுலக வணிகர்கள் உறுதிப்பட தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right