இயக்குநர்களுடன் உருவாகும் 'மொடர்ன் லவ் -சென்னை'

Published By: Ponmalar

09 May, 2023 | 01:48 PM
image

தமிழ் திரையுலகத்தின் முத்திரை பதித்த இயக்குநர்களான பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி சக்திவேல், ராஜு முருகன் ஆகியோர்களின் இயக்கத்தில் தயாரான 'மொடர்ன் லவ் -சென்னை' எனும் ஆந்தாலஜி திரைப்படம், அமேசான் ப்ரைம் டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 18ஆம் திகதியன்று வெளியாகிறது.

அமேசான் பிரைம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இணைய தொடர் 'மொடர்ன் லவ்'. இந்த இணைய தொடரை ஆந்தாலஜி பாணியிலான இந்திய பதிப்பாக 'மொடர்ன் லவ் -மும்பை', 'மொடர்ன் லவ் -ஹைதராபாத்' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த ஆந்தராலஜி திரைப்படம் 'மொடர்ன் லவ் -சென்னை' எனும் பெயரில் தமிழ் பதிப்பாக வெளியாகவிருக்கிறது.

டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் ஆகிய ஆறு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

இதில் இடம் பெறும் ஆறு அத்தியாயங்களுக்கு 'லாலாகுண்டா பொம்மைகள்', 'இமைகள்', 'காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற இமோஜி', 'மார்கழி', 'பறவை கூட்டில் வாழும் மான்கள்', 'நினைவோ ஒரு பறவை' என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், கிஷோர், ரம்யா நம்பீசன், ரித்து வர்மா, வாமிகா, விஜயலட்சுமி, சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங், ஸ்ரீ கிருஷ்ண தயாள், சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், அனிருத் கனகராஜன், டீஜே, பானு, ஸ்ரீ கௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆறு அத்தியாயங்களாக இடம்பெறும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா, 'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜா, 'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

'மொடர்ன் லவ் -சென்னை' எனும் ஆத்தாலஜி திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களிலும் காதல் உணர்வின் நுட்பங்கள், சிக்கல்கள், காதலின் அழகு, மகிழ்ச்சி, பெருமை, நகர கலாச்சாரம் என பல விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அலச பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இந்த திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழம்பெரும் இந்திய திரைப்பட நடிகை சிஐடி...

2024-09-18 15:28:17
news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13