'இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் பிறக்கும் போதே கர்ம வினைகளுக்கான பலனை அனுபவிக்கவே பிறக்கிறோம்' என்று ஆன்மீக பெரியோர்கள் ஒரு விடயத்தை முன்னிறுத்துவார்கள்.
மேலும் மனிதர்களாகிய நாம் கடினமாக உழைத்தாலும்... வளர்ச்சி என்பதும், முன்னேற்றம் என்பதும், ஒரு எல்லைக்கு மேல் செல்லாது. இதனை எம்முடன் பயணித்த சக நண்பர்களையோ அல்லது சக தோழிகளின் வாழ்விலோ.. அவர்களுடைய பலனையும்.. வாழ்க்கையையும்..
ஊற்று பார்த்தும், ஒப்பிட்டு பார்த்தும் தெரிந்து கொள்கிறோம். ஏன் எம்மால் மட்டும் கடினமாக உழைத்தாலும் விரும்பிய முன்னேற்றம் கிடைப்பதில்லை? என்பது குறித்து மனதில் கேள்வியை ஏற்படுத்திக் கொள்கிறோம். இதற்கான விடையினை எம்முடைய சோதிட நிபுணர்கள் 'கர்மா' என்ற என குறிப்பிடுகிறார்கள்.
இந்த கர்மா குறித்து டி என் ஏ ஜோதிட நிபுணர்கள் ஒருவகையான கருத்தினை முன் வைக்கிறார்கள். அதாவது உங்களுடைய ஜென்ம நட்சத்திரம்- அது எந்த கிரகத்தின் கர்ம பதிவினை பெற்றிருக்கிறதோ.. அதன் அடிப்படையில் கர்மாவை குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எந்த மாற்று வழியும் இல்லை. இதனால் கர்மா குறித்து இவர்களது கருத்துதான் முன்மொழியப்படுகிறது. ஆனால் நியூமராலஜி எனப்படும் எண் கணிதத்தில் கர்மாவிற்கான எண்களை கண்டறிய முடியும் என எண் கணித நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்மில் பலரும் எண் கணிதம் குறித்து அறிந்து வைத்திருப்போம். மேலும் பிறவி எண், விதி எண் இவற்றைக் குறித்தும் அறிந்து வைத்திருப்போம். ஆனால் கர்ம எண் குறித்து தெரிந்திருப்பதில்லை. ஏனெனில் சோதிடத்தில் குறிப்பாக எண் கணித சோதிடத்தில் உயர் ஆய்வு செய்யும் ஒரு சில ஜோதிட நிபுணர்களுக்கு மட்டுமே இதன் சூட்சமங்கள் தெரிந்திருக்கிறது.
கர்ம எண் கண்டுபிடிப்பது எப்படியெனில், உங்களது பிறவி எண் மற்றும் உங்களது விதி எண்ணைக் கூட்டி.. அதனை இரண்டால் வகுத்து, அதனை ஒற்றை இலக்க அடிப்படையில் கூட்டினால் கிடைக்கும் எண் தான் கர்ம எண் ஆகும்.
இதனை எளிய உதாரணத்தின் மூலம் விளக்கலாம். ஒருவரது பிறந்த நாள் 26/ 3 /1968 என இருந்தால்.., இவரது பிறவி எண் 2+6 --8 என்றும், இவரது விதி எண் 2+6+3+1+9+6+8 --35 என்றும் வரும். தற்போது கர்ம எண்ணைக் கண்டறிய வேண்டுமென்றால் 8+8--16X2 --32, 3+2--5. எனவே இவரது கர்ம எண் ஐந்து என்று வரும். இவர் ஐந்தாம் எண்ணுக்குரிய விடயங்களை பரிகாரமாக மேற்கொள்ள தொடங்கினால், கர்ம வினைகள் அகன்று, பூர்வ புண்ணிய பலன்கள் கிடைக்கப் பெற்றும், முன்னோர்களின் ஆசி கிடைக்கப்பெற்றும்.. வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பர்.
தகவல் : ரவிக்குமார்
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM