விளையாட்டுத்துறையின் அதி உயர் விருதாக கருதப்படும் லோரியஸ் விருதை ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸி வென்றுள்ளார்.
2023 லோரியஸ் விருது வழங்கல் விழா, பிரான்ஸின் பாரிஸ் நகரில் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போது ஆண்கள் பிரிவில் லயனல் மெஸி விருது வென்றார். 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி சம்பியனாகிய நிலையில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறந்த அணிக்கான விருதை ஆர்ஜென்டீன ஆண்கள் கால்பந்தாட்ட அணி வென்றது. இதன்மூலம் இவ்வருடம் இரு விருதுகள் மெஸிக்கு கிடைத்துள்ளன.
ஒரே வருடத்தில் சிறந்த வீரர் மற்றும் சிறந்த அணிக்கான லோரியஸ் விருதுகளை வென்ற உலகின் முதல் வீரர் லயனல் மெஸி ஆவார்.
35 வயதான மெஸி இரண்டாவது தடவையாக லோரியஸ் விருதை வென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு பிரித்தானிய காரோட்ட வீரர் லூயிஸ் ஹமில்டனுடன் இணைந்து இவ்விருதை மெஸி வென்றிருந்தார்.
இதனால், லோரியஸ் விருதை இரு தடவைகள் வென்ற முதல் கால்பந்தாட்ட வீரராக புதிய வரலாறு படைத்துள்ளார். லயனல் மெஸி.
35 வயதான மெஸி, கால்பந்தாட்டத்துறையின் அதி உயர் விருதான பெலோன் டி' ஓர் விருதை மெஸி 7 தடவைகள் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லோரியஸ் விருது வழங்கல் விழாவில் தனது மனைவி அன்டோனெலா ரொக்குஸோ சகிதம் மெஸி பங்குபற்றினார்.
இம்முறை பெண்கள் பிரிவில் லோரியஸ் விருதை, ஜமெய்க்கா குறுந்தூர ஓட்ட வீராங்கனை ஷெல்லி ஆன் பிரேஸர் பிரைஸ் வென்றார். இவர் கடந்த வரும் 5 ஆவது தடவையாக 100 மீற்றர் ஓட்டத்தில் உலக சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த மீள்வருகையாளருக்கான விருதை, டென்மார்க் மற்றும் மென்செஸ்டர் யுனைடெட் கழக வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் வென்றார். இவர் 2021 மார்ச் மாதம் யூரோ கிண்ணபோட்டியின் போது மாரடைப்பினால் மயங்கிவீழ்ந்தார். 8 மாதங்களின் பின் மீண்டும் உயர்மட்ட போட்டிகளுக்குத் திரும்பிய அவர் கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளிலும் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
திடீர்வளர்ச்சியான திறமையை வெளிப்படுத்தியவருக்கான திருப்புமுனை லோரியஸ் விருதை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் கார்லேரஸ் அல்கராஸ் வென்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான விருதை சுவிட்ஸர்லாந்தின் பரா ஓட்ட வீராங்கனை கெத்தரின் டெப்ரன்னர் வென்றார்.
ஒலிம்பிக் ப்றீ ஸ்டைல் பனிச்சறுக்கல் சம்பியனான சீன- அமெரிக்க வீராங்கனை எய்லீன் கு, உலக அக்ஷன் லோரியஸ் விருதை வென்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM