(நெவில் அன்தனி)
கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அண்ட்ரே ரசலும், ரின்கு சிங்கும் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசிப் பந்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இந்த வெற்றியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நிலையில் 10 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு முன்னேறி ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்கை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 180 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவர் நிட்டிஷ் ரானாவும் வெங்கடேஷ் ஐயரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 51 ஓட்டங்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு கைகொடுப்பதாக அமைந்தது.
எனினும், 16ஆவது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களைப் பெற்றிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிறு தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.
இந் நிலையில் அண்ட்ரே ரசல், ரின்கு சிங் ஆகிய இருவரும் 27 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து கொல்கத்தா வெற்றி பெறுவதற்கு உதவினர்.
19ஆவது ஓவரில் 3 சிக்ஸ்களை விளாசிய அண்ட் ரசல் கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார்.
ஆனால், வெற்றிக்கு தேவைப்பட்ட 2 ஓட்டங்களை கடைசிப் பந்தில் பவுண்டறி மூலம் ரின்கு சிங் பெற்றுக்கொடுத்து கொல்கத்தாவின் வெற்றியை உறுதிசெய்தார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இப்போதெல்லாம் இந்த எண்ணிக்கை சுமாரான மொத்த எண்ணிக்கையாக கணிப்பிடப்படுகிறது.
அணித் தலைவர் ஷிக்கர் தவான், ஜிட்டேஷ் ஷர்மா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
எவ்வாறாயினும் ஷாருக் கான், ஹார்ப்ரீட் ப்ரார் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 16 பந்துகளில் பகிர்ந்த 40 ஓட்டங்களே பஞ்சாப் கிங்ஸை நல்ல நிலையில் இட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மிகத் திறமையாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
எண்ணிக்கை சுருக்கம்
பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 179 - 7 விக். (ஷிக்கர் தவான் 57, ஜிட்டேஷ் ஷர்மா 21, ஷாருக் கான் 21 ஆ.இ., ஹார்ப்ரீத் ப்ரார் 17 ஆ.இ., வருண் சக்கரவர்த்தி 26 - 3 விக்., ஹார்ஷித் ராணா 33 - 2 விக்.)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 182 - 5 விக். (நிட்டிஷ் ராணா 51, அண்ட்ரே ரசல் 23 பந்துகளில் 43, ஜேசன் ரோய் 38, ரின்கு சிங் 10 பந்துகளில் 21 ஆ.இ., ராகுல் சஹார் 23 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM