சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார்கள் மற்றும் கம்ப்ரசர்களுக்கு சாம்சங் வழங்கும் 20 ஆண்டு உத்தரவாதம்

Published By: Digital Desk 5

09 May, 2023 | 10:04 AM
image

இந்த ஆண்டின் People’s Youth Choice Brand விருதை வென்ற Samsung, தனது சலவை இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார் மற்றும் அதன் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருக்கு முதல் முறையாக 20 ஆண்டு உத்தரவாதத்தை அறிமுகப்படுத்தி புதிய மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளது. Samsung தற்போது சந்தையில் 20 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்கும் ஒரே நுகர்வோர் மின்னணு வர்த்தக நாமமாகும்.

தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நீடித்து நிலைத்தன்மையை அதிகரிப்பதன் மூலம், Samsung வழங்கும் இந்த தனித்துவமான சலுகை வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இது மின்-கழிவைக் (e-waste) குறைப்பதற்கும், நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மற்றும் நீடித்த சாதனங்கள் மற்றும் நிலையான வாழ்க்கை முறையை வழங்குவதற்குமான உறுதிப்பாட்டை மேலும் ஒத்துழைப்பு வழங்குகிறது.

Samsungன் மேம்படுத்தப்பட்ட Digital Inverter Compressor மற்றும் Digital Inverter Motor ஆகியவையின் தரம் மற்றும் நிலைத்தன்மையில் நிறுவனத்தின் முதலீட்டை நிரூபிக்கின்றதுடன், நிறுவனம் இறுதியாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற முடிந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த Samsung இலங்கையின் முகாமைத்துவ பணிப்பாளர் சன்க்வா சொன்க், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் பார்வையுடன், எங்கள் சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார்கள் மற்றும் கம்ப்ரசர்களுக்கு 20 ஆண்டு உத்தரவாதத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்றுவது நேரத்தையும் சக்தியையும் விரயமாக்குவது மட்டுமின்றி உடல் ரீதியாகவும் கழிவுகளை குறைத்துக் கொள்ளவும் முடிகிறது. எனவே, இந்த முயற்சியின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியையும் நீண்ட ஆயுளையும் வழங்கும் அதே வேளையில் மின்னணுக் கழிவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

Digital inventor தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மேம்பட்ட நீண்டகால பாவனை

Digital Inverter Technology (DIT) ஆற்றல் திறன், செயல்திறன் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற பெரிய சாதனங்களின் நீடித்துழைப்பு உட்பட பல காரணிகளை பாதிக்கிறது. எனவே, இந்த தொழில்நுட்பத்தை 20 வருட உத்தரவாதக் காலத்துடன் பாதுகாப்பதன் மூலம், உபகரணங்கள் நீண்ட காலம் நீடிக்கும், அத்துடன் நம்பகத்தன்மையின் மூலம் பாவனையாளர்களுக்கு சிறந்த ஆறுதலையும், கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதத்தையும் குறைக்கும்.

டிஜிட்டல் இன்வெர்ட்டர்களின் செயல்பாடு

டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார் ஒரு வலுவான காந்த சக்தியைக் கொண்டுள்ளது, இது கடினத்தன்மையைக் குறைக்கிறது மற்றும் உங்கள் சலவை இயந்திரத்தை மிகவும் சீராக இயங்க அனுமதிக்கிறது. இது ஒரு வசதியான வாழ்க்கைக்கு வசதியளிக்கிறது. இது சலவை செய்யப்படும் சலவைத் துணிகளின் அளவைப் பொறுத்து சலவை செலவைக் குறைக்கிறது.

டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரசர்கள் மற்ற நிலையான கம்ப்ரசர்களைப் போலல்லாமல் மாறக்கூடிய வேகத்தில் செயல்பட முடியும். டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரசர்கள் எப்பொழுதும் இயங்கும் ஆனால் வெவ்வேறு வேகத்தில் இயக்க முடியும். இது அதிக செயல்திறன் மற்றும் குளிர்சாதன பெட்டியில் நிலையான வெப்பநிலை பராமரிப்பை உறுதி செய்கிறது. இது கணிசமாக குறைந்த செலவுகள், குறைக்கப்பட்ட கார்பன் தடம், குறைந்த சத்தம் மற்றும் கம்ப்ரசருக்கு நீண்ட ஆயுளையும் வழங்குகிறது.

வலு சக்தி ஆற்றல் திறனுக்கான உத்தரவாதம்

Samsungன் டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் அதன் அங்கீகரிக்கப்பட்ட நீடித்து நிலைத்திருக்கும் மற்ற சாதனங்களுடன் ஒப்பிடும் போது இது தனித்துவமானதாக உள்ளது. அதன் டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்தின் உத்தரவாதக் காலத்தை நீட்டிப்பதன் மூலம், Samsung தனது வாடிக்கையாளர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மேம்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளிக்கிறது.

அதாவது, உபகரணங்களைத் தயாரிக்கும் போது அல்லது அதற்குப் பிறகு, 20 ஆண்டுகளுக்கு உபகரணங்களைப் பராமரிக்கவும் சேவை செய்யவும் தேவையான பாகங்கள் கிடைக்கும்.

நீண்டகால பாவனை மூலம் நிலைத்தன்மையை நோக்கி

நீண்ட ஆயுளுடன் நீடித்து நிலைத்திருப்பதற்கான சிறிய தேர்வுகள் உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று Samsung நம்புகிறது, எனவே இது அனைத்தும் வீட்டிலிருந்து ஆரம்பமாகிறது. Samsung தனது சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 20 ஆண்டு உத்தரவாதத்துடன் புத்தாக்கமான தீர்வுகளைச் சேர்ப்பதன் மூலம் வீட்டிற்கு நிலையான தீர்வுகளை செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.

Samsungன் எப்பொழுதும் மேம்பட்டு வரும் திறமையான குளிர்சாதனப்பெட்டி, நீண்ட ஆயுள் கொண்டது அல்லது சலவை இயந்திரத்தைத் தேடும் நுகர்வோருக்கு இது சிறந்த தேர்வாகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் வங்கியின் கோடி அதிர்ஷ்டம் 2023...

2023-05-29 15:56:24
news-image

ஈவா அனுசரணையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய...

2023-05-25 10:11:01
news-image

DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ்...

2023-05-25 09:56:13
news-image

நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்க...

2023-05-25 10:09:50
news-image

'People’s Remittance கோடி அதிர்ஷ்டம்’ ஆண்டிறுதி...

2023-05-24 14:55:31
news-image

விளம்பரத்துறையை புதுப்பிக்க 3R உத்தியை இயக்க...

2023-05-22 20:19:51
news-image

DSI அதன் AVI வர்த்தகநாமத்தின் மீறலுக்கு...

2023-05-22 13:33:00
news-image

AIA லங்காவின் பிரதம முகவர் நிறுவன...

2023-05-22 12:39:22
news-image

அமானா வங்கி 'LankaPay டெக்னோவேஷன் விருதுகள்...

2023-05-18 17:08:15
news-image

பிசினஸ் டுடேயின் சிறந்த 40 நிறுவனங்கள்...

2023-05-18 14:31:58
news-image

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையானது...

2023-05-16 20:57:13
news-image

கடன் தள்ளுபடி குறித்த செய்திக்கு மக்கள்...

2023-05-16 21:25:27