அடுத்த வெசாக் தினத்தின்போது ஆட்சி அமைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பது நகைச்சுவையானது - நவீன்

Published By: Digital Desk 3

08 May, 2023 | 05:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்ட எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த வெசாக் தினத்தின்போது ஆட்சி அமைப்பதாக தெரிவிப்பது நகைச்சுவையான பேச்சாகும். கடந்த வருடமும் இதனை அவர் தெரிவித்திருந்தார் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (8)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அடுத்துவரும் வெசாக் தினமாகும்போதும் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டு ஆட்சி அமைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார். கடந்த வெசாக் தினத்தின் போதும் இவ்வாறு தெரிவித்திருந்தார். இடம்பெற்றதா? எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு நகைச்சுவையாகவே இருக்கிறது. நாட்டின் அதிகாரத்தை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தபோது, அதனை ஏற்றுக்கொள்ளாமல் பல்வேறு காரணங்களை தெவித்து நழுவிச்சென்றார்.

அத்துடன் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு 70 தடவை தன்னிடம் கேட்டுக்கொண்டதாக பல்வேறு கதைககளை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்து வருகிறார். ஆனால் தற்போது இந்த கதைகளில் எந்த பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு அது தேவையும் இல்லை. மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு யார் தீர்வை பெற்றுக்கொடுப்பது என்பதே மக்களுக்கு தேவையாக இருக்கிறது. அந்த சவாலில் இருந்து அவர் தப்பிச்சென்றார். அவ்வாறான ஒருவருக்கு தலைமைத்துவத்தை கொண்டு நடத்த முடியுமா என எமக்கு தெரியாது.

நாடு வங்குரோத்து அடைந்திருந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார். அந்த சவாலை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனை அவர் தற்போது மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். 3வருடங்களுக்கு பின்னர் தமிழ், சிங்கள புதுவருடம் மற்றும் வெசாக் தினத்தை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கான சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சி வெற்றியடைந்திருப்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் இலக்காகும். அதற்காக வெளிநாடுகளின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதேநேரம் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றன. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் போது வங்கள் பாதிக்காத வகையிலேயே அற்கொள்ளப்படும் என மத்திய வங்கி ஆளுநர் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

எனவே ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்கிறது.இதனை பொறுத்துக்கொள்ள முடியாமலே எதிர்க்கட்சிகள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களையும் பொய் பிரசாரங்களையும் மேற்கொண்டு மக்களை குழப்பி வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

லொறியால் மோதிய வயோதிபரை வைத்தியசாலைக்கு கொண்டு...

2023-12-11 18:28:47
news-image

மதுபான சாலைகளை காட்டி சுற்றுலா பயணிகளை...

2023-12-11 18:32:29
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02