கூகுள் தனது டூடுல் சேவை மூலமாக உலகின் தலை சிறந்த மனிதர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை வித்தியாசமான படங்களின் மூலமாக ஆண்டு முழுவதும் கொண்டாடி வரும் கூகுள், இந்த ஆண்டின் கடைசி தினமான இன்று, கிளையில் உள்ள பல வண்ணப்பறவைகள் புத்தாண்டுக்காக காத்திருப்பது போல் அனிமேஷன் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் 2016 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ள முட்டைக்கு அருகே உள்ள பறவை தன் கையில் உள்ள கடிகாரத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்து எப்போது புத்தாண்டு வரும் என்று காத்திருக்கிறது. வெடிக்கக் காத்திருக்கும் 2016 என்ற அந்த முட்டை வெடிக்கும் வரை நாமும் புது வருடப் பிறப்பிற்காக காத்திருப்போம்.