சூடானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சவுதி நிதியுதவி

Published By: Digital Desk 3

08 May, 2023 | 03:49 PM
image

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் சவுதி அரேபிய மன்னர் மற்றும் பட்டத்து இளவரசர்  ஆகியோர் 100 மில்லியன் அமெரிக்க  டொலர்கள் மதிப்பிலான பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கவும், சூடான் மக்களின் நலனுக்காக “சாஹிம்” தளத்தின் மூலம் ஒரு பாரிய பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவும், மன்னர் சல்மான் நிவாரண மையத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, (07) இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் பிரதமர் இளவரசர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் அவர்கள், சூடான் மக்களுக்காக, 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும், அம்மக்கள் தற்போது அனுபவித்து வரும் இன்னல்களின் விளைவுகளைத் தணிக்க “சாஹிம்” தளத்தின் மூலம் ஒரு பாரிய பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யுமாறும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

அரச நிர்வாக மையத்தின் ஆலோசகரும், பொது மேற்பார்வையாளருமான டாக்டர். அப்துல்லா பின் அப்துல் அசீஸ் அல்-ரபீஹ், இந்த உதவியானது இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரின் உத்தரவுக்கமைய, சகோதர சூடானிய மக்களுக்கு ஆதரவாக நிற்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் கடினமான நெருக்கடியின் விளைவுகளைத் தணிப்பதற்குமாக வழங்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தினார்.

அரச தலைமைத்துவத்தின் பணிப்புரைகளுக்கமைய, சூடான் குடியரசில் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்றும், உலகின் எப்பகுதியிலிருந்தாலும் இன்னல்கள் படும் மக்களுக்கு உதவுவ முன்வருவது போல் இவ்வுதவிகளை வழங்குவதற்காக அனுமதி வழங்கிய இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மற்றும் பட்டத்து இளவரசர் அவர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32