அத்துருகிரிய இரட்டைக் கொலை: சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்!

Published By: Digital Desk 3

08 May, 2023 | 02:25 PM
image

அத்துருகிரிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் இன்று (08) கொலைகள் இடம்பெற்ற இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் நேற்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 29 வயதான சந்தேக நபர் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், உயிரிழந்த பெண்ணிடம் திருடப்பட்ட சுமார் 450,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு வைக்கப்பட்ட  பற்றுச்சீட்டும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கடந்த 2 ஆம் திகதி மாலை அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகம வீதி அத்துருகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கடையின் அலுவலக அறைக்குள் வைத்து   கொடூரமான முறையில்  தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மரக்கடையில் பணியாற்றிய அத்துகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்தார்.

குறித்த நபர் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும்  கடந்த 6ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58