துருவ் விக்ரமின் 'பூமதியே..' விடியோ இசை அல்பம்

Published By: Ponmalar

08 May, 2023 | 01:26 PM
image

நட்சத்திர வாரிசும், இசை கலைஞருமான துருவ் விக்ரம் இயக்கி, நடித்திருக்கும் 'பூமதியே..' எனும் விடியோ இசை அல்பம் வெளியாகி குறுகிய கால அவகாசத்திற்குள் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

'சீயான்' விக்ரமின் வாரிசும், 'ஆதித்ய வர்மா' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான துருவ் விக்ரம், தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் கபடி வீரராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் கிடைத்த ஓய்வு நேரத்தில் தமக்கு விருப்பமான விடியோ அல்பம் உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே 'மனசே' எனும் பெயரில் விடியோ இசை அல்பத்தை இயக்கி நடித்திருக்கும் துருவ், தற்போது 'பூமதியே..' எனும் அல்பத்தை நடித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார்.

இந்த விடியோ இசை அல்பத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். மென்மையான காதல் உணர்வை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த 'பூமதியே..' பாடலை இயக்கி நடித்திருப்பதன் மூலம் துருவ் விக்ரம் இளைய தலைமுறையினரின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவாஜி கணேசனின் வசனத்துக்காகவே வரலாறு படைத்த...

2026-05-16 14:11:23
news-image

வடிவேலு - பிரபுதேவா இணைந்த 'பாங்க்...

2026-05-15 16:32:13
news-image

எக்ஸாம் - இணைய தொடர் விமர்சனம்

2026-05-15 16:32:00
news-image

ஜெயராம் - ஊர்வசி நடித்திருக்கும் 'பரிமளா...

2026-05-15 16:09:33
news-image

அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் வெளியீட்டு...

2026-05-15 16:07:41
news-image

சந்தோஷ் நடிக்கும் ‘டபுள் ஒக்குபன்சி -...

2026-05-14 18:05:23
news-image

நடிகர் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடிக்கும் ‘ஆல்பாஸ்’...

2026-05-14 17:46:38
news-image

சனாதனதர்மத்திற்கு ஆதரவுகரம் நீட்டிய சிவகார்த்திகேயன்

2026-05-14 17:45:50
news-image

ஜூன் மாதத்தில் வெளியாகும் சமந்தாவின் ‘எங்கள்...

2026-05-14 17:32:58
news-image

சைலண்ட் இன்ஃபுளுயன்சர் இசை அல்பம் மூலம்...

2026-05-14 17:37:51
news-image

தயாரிப்பாளர் கே ஜே ஆர் நடிக்கும்...

2026-05-13 17:28:08
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-13 17:23:52