'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் படத்தில் இடம்பெற்ற 'இமைத்திடாதே..' எனத் தொடங்கும் பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ்ந்திருமேனி, மறைந்த 'ஜனங்களின் கலைஞன்' விவேக், கனிகா, ரித்விகா, மோகன் ராஜா, கரு. பழனியப்பன், சின்னி ஜெயன் வித்தியா பிரதீப் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்தெருக்கிறார்கள்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். இசக்கி துரை தயாரித்திருக்கிறார்.
நிதி சிக்கல் காரணமாக கிடப்பில் போடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது மே மாதம் 19 ஆம் திகதி என்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து படத்தை படக்குழுவினர் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். படத்தின் இசையை 'உலகநாயகன்' கமல்ஹாசன் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதி, பின்னணி பாடகி மால்வி சுந்தரேசன் பாடியிருக்கும் 'இமைத்திடாதே உனது விழியின் வழியே நுழைய பார்க்கிறேன்..' என்ற பாடலின் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த காணொளியில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும், நடிகை மேகா ஆகாசும் காதலிப்பது கவிதையாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால்... இளைய தலைமுறையினரிடத்தில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM