கோதுமை மா, சீனியின் விலைகள் அதிகரிப்பு !

Published By: Digital Desk 3

08 May, 2023 | 12:04 PM
image

(எம்.மனோசித்ரா)

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான சுங்க வரி சலுகை நீக்கப்பட்டுள்ளதால், அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, 

கோதுமை மாவுக்கு 3 ரூபாவால் சுங்க வரி சலுகை வழங்கப்பட்டிருந்தது. எனினும் மீண்டும் அதனை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதனை அடிப்படையாகக் கொண்டு மாவின் விலையை அதிகரிப்பதற்கான தேவை கிடையாது. அத்தோடு தற்போது டொலரின் பெறுமதியும் குறைவடைந்துள்ளது. எனவே கோதுமை மா விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும் தமக்கு வழங்கப்பட்டிருந்த வரி சலுகை நீக்கப்பட்டுள்ளமையால் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலையும் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆற்றில் நீராடிய இளைஞர் முதலை தாக்குதலுக்கு...

2023-11-30 13:52:20
news-image

வவுனியா செட்டிகுளத்தில் கணவனும் மனைவியும் வெட்டிக்...

2023-11-30 13:46:52
news-image

யாழ் போதனா வைத்தியசாலையில் தெலைபேசி திருட்டு...

2023-11-30 13:51:32
news-image

"கண்டி பெருநகர அபிவிருத்தி” வேலைத்திட்டத்துக்கு 1,500...

2023-11-30 11:50:14
news-image

கிளிநொச்சி பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்...

2023-11-30 12:59:15
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-11-30 12:49:18
news-image

யாழில் மீற்றர் வட்டி மாபியாக்கள் -...

2023-11-30 13:51:00
news-image

அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களில் மாற்றமில்லை இரண்டாம் தவணை...

2023-11-30 12:42:01
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை :...

2023-11-30 13:49:53
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும்...

2023-11-30 12:31:04
news-image

போதை மாத்திரை கடத்தல்காரர் கைது ;...

2023-11-30 13:48:27
news-image

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

2023-11-30 12:23:54