பாகிஸ்தானின் முழுமையான தொடர் வெற்றியைத் தவிர்த்தது நியூஸிலாந்து; இப்திகாரின் முயற்சி வீண்

Published By: Digital Desk 5

08 May, 2023 | 11:00 AM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற 5ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹென்றி ஷிப்லி, ரச்சின் ரவிந்த்ர ஆகிய இருவரின் சிறந்த பந்துவீச்சுகளின் உதவியுடன் 47 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றியீட்டியது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் முழுமையான வெற்றியை நியூஸிலாந்து தவிர்த்தது.

இந்தத் தொடரை பாகிஸ்தான் 4 - 1 என கைப்பற்றியது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் முதலாம் இடத்தை அடைந்த பாகிஸ்தான், கடைசிப் போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக  48 மணித்தியாலங்களுக்குள்   3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

அவுஸ்திரேலியா முதலாம் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

இந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாமின் 100ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக அமைந்தது. ஆனால், அவரால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியாமல் போனது.

கடைசிப் போட்டியில் முழுமையான ஆற்றலை தமது அணி வெளிப்படுத்தியது மனதுக்கு நிறைவாக இருக்கிறது என நிஹஸிலாந்து அணித் தலைவர் டொம் லெதம் போட்டி முடிவில் குறிப்பிட்டார்.

வேகப்பந்துவீச்சாளர்  ஷிப்லி  சரியான இலக்குகளில் மிகச் சிறப்பாக பந்துவீசியதையும் லெதம் மெச்சினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து வில் யங், அணித் தலைவர் டொம் லெதம் ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 299 ஓட்டங்களைக் குவித்தது.

ஹென்றி நிக்கல்ஸ், வில் யங் ஆகியோர் 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 51 ஓட்டங்கள், வில் யங், டொம் லெதம் ஆகியோர் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 74 ஓட்டங்கள், டொம் லெதம், மார்க் செப்மன் ஆகியோர் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த் 56 ஓட்டங்கள் என்பன நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தன.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 46.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதல் 4 விக்கெட்களை 66 ஓட்டங்களுக்கு இழந்த பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது. இந் நிலையில் அகா சல்மான், இப்திகார் அஹ்மத் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

அகா சல்மான் ஆட்டம் இழந்த பின்னர் இப்திகார் அஹ்மத் தனியாக போராடிய போதிலும் அவரது முயற்சி கைகூடாமல் போனது.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 49.3 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 299 (வில் யங் 87, டொம் லெதம் 59, மார்க் செப்மன் 43, ரச்சின் ரவிந்த்ர 28, ஷஹீன் ஷா அப்றிடி 46 - 3 விக்., உசாமா மிர் 53 - 2 விக்., ஷதாப் கான் 67 - 2 விக்.)

பாகிஸ்தான் 46.1 சகலரும் ஆட்டம் இழந்து 252 (இப்திகார் அஹ்மத் 94 ஆ.இ., அகா சல்மான் 57, பக்கார் சமான் 33, ஹென்றி ஷிப்லி 34 - 3 விக்., ரச்சின் ரவிந்த்ர 65 - 3 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20