நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைப்பு திட்டங்கள் எம்மிடமுள்ளன - எரான் விக்கிரமரத்ன

Published By: Digital Desk 5

08 May, 2023 | 11:00 AM
image

(எம்.மனோசித்ரா)

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை விற்காது , அவற்றை இலாபமீட்டுபவையாக மாற்றுவதற்கான பொருளாதார திட்டங்கள் தம்மிடமுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் அண்மைக்காலமாக பாரிய தொழிலதிபர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாக செயற்படக் கூடாது. காரணம் இவ்வாறான நிலைமையானது இலங்கையில் முதலீடுகளுக்கான வாய்ப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்தும். நாடு அபிவிருத்தியடைய வேண்டுமெனில் முதலீடுகள் மிக அவசியமானவையாகும். எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்த வேண்டும்.

விரைவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் நாட்டை ஆட்சி செய்வதற்கு பொறுத்தமான பொருளாதாரத் திட்டங்களை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்து வருகிறது. அதற்கமைய எமது முதலாவது முன்மொழிவு மிகக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு பொருட்களை வழங்குவதாகும். அத்தோடு முதலீடுகளில் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்பதும் எமது பிரதான நோக்கமாகும்.

மேலும் ஸ்ரீலங்கன் எயா லைன்ஸ் உள்ளிட்ட நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்காமல் , அவற்றை இலாபமீட்டும் நிறுவனங்களாக மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்களும் எம்மிடமுள்ளன. மறுசீரமைப்புக்களின் போது , குறைந்த விலையில் மக்களுக்கு தரமான சேவைகள் வழங்கப்படும். மாறாக தற்போதுள்ளதைப் போன்று மக்களால் தாங்கிக் கொள்ள முடியாதளவுக்கு விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது.

எனவே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , இலங்கை மின்சாரசபை என்பவற்றை விற்பதற்கு எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாது. மாறாக இவற்றில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்களுக்கு குறைந்த விலை தரமான இடையறாத சேவைகள் எமது ஆட்சியில் மக்களுக்கும் வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37
news-image

சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி...

2025-01-16 17:01:14
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான...

2025-01-16 17:13:43
news-image

ஜனாதிபதி பீஜிங்கில் சீன மக்கள் வீரர்களின்...

2025-01-16 17:31:50
news-image

"வளமான நாடு - அழகான வாழ்க்கை"...

2025-01-16 17:26:50
news-image

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு...

2025-01-16 17:22:49