இன்புலுவன்ஸா நோய் அறிகுறி உள்ளவர்கள் வீடுகளுக்குள்ளே முகக்கவசம் அணியவேண்டும் - விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா 

Published By: Nanthini

07 May, 2023 | 04:57 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் இன்புலுவன்ஸா வைரஸ் பரவும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாருக்காவது காய்ச்சல் பரவிவருவதாக இருந்தால் அது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். அவர்கள் வீட்டுக்குள்ளேயே முகக்கவசம் அணிந்திருப்பது பாதுகாப்பானதாகும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து பரவிவரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் இந்த காலப்பகுதியில் டெங்கு நோய் மற்றும் இன்புலுவன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 

மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போது டெங்கு நோய் அதிகரித்து வருகிறது.

டெங்கு நோய் அறிகுறிகளாக இரண்டு தினங்களுக்கு கடினமான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி போன்ற அடையாளங்களையே காண்கிறோம். இரண்டு தினங்களுக்கு அதிக நாட்கள் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று இன்புலுவன்ஸா நோயும் அதிகரித்துச் செல்கிறது. அதன் அறிகுறிகளாக காய்ச்சலும் இருமல், தடிமல், ஒரு சிலருக்கு வாந்தி ஏற்படுவது போன்ற அறிகுறிகளை காணலாம். 

இந்த நோயுடைய சில சிறுவர்கள் மயக்கமடைந்து விழுவார்கள். அதேநேரம் வீடுகளில் மிக விரைவாக இந்த நோய் பரவுவதாக கண்டால், அது இன்புலுவன்ஸா வைரஸாகும். 

இவ்வாறான நோய் அறிகுறி இருப்பவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். அதிக மக்கள் நடமாடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

அத்துடன், இந்த நோய் அறிகுறி இருக்கும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டாம். அவர்களை முடியுமான வரையில் ஓய்வாக இருக்கச்செய்ய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57