மழையில் நனைந்த ஆட்டுக்குட்டிகளை காப்பாற்றச் சென்ற மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - யாழில் சம்பவம்

Published By: Nanthini

07 May, 2023 | 04:06 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ். வண்ணார்பண்ணை பகுதியில் மின்சாரம் தாக்கி க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது 18) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வளர்க்கப்படும் ஆடொன்று குட்டி ஈன்றதனால், குறித்த மாணவர் அதனை வேறோர் இடத்துக்கு மாற்ற முற்பட்டுள்ளார். 

அப்போது அருகில் இருந்த பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழியில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் மாணவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மழை பெய்துகொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு மின்சார தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50...

2025-12-11 17:27:59
news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32
news-image

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர...

2025-12-11 19:06:32
news-image

அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்...

2025-12-11 18:43:59
news-image

பேரிடருக்குப் பிறகு மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உலக...

2025-12-11 17:46:45
news-image

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையை...

2025-12-11 17:38:32
news-image

அனர்த்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற...

2025-12-11 16:12:33