எமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்வில்லை சித்தார்த்தன், செல்வம் தெரிவிப்பு : அறிவிப்பு விடுத்தேன் என்கிறார் சுமந்திரன்

Published By: Digital Desk 5

06 May, 2023 | 10:11 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சந்திப்புக்கோ அல்லது, அதற்கு முன்னதாக சம்பந்தனின் கொழும்பில் இல்லத்தில் நடைபெறும் சந்திப்புக்கோ எமக்கு எந்தவிமான அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று புளொட் மற்றும் ரெலோ அறிவித்துள்ளது.

இது தொடர்பில் புளொட் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில், “ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் எதிர்வரும் 9அம் திகதி அவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றவிருப்பதாக  அறியமுடிந்தது. 

அத்துடன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் இது குறித்த கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளபோதிலும், அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் அச்சந்திப்பில் என்னால் கலந்துகொள்ள முடியுமா என்று உறுதியாகக் கூறமுடியாது” என்றார். 

அதேநேரம், ரெலோவின் தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தெரிவிக்கையில், “ஜனாதிபதியுடான தமிழரசுக்கட்சியினுடைய சந்திப்பு குறித்தோ, அதற்கு முன்னரான ‘சம்பந்தன் இல்லத்தில் இடம்பெறும்’ சந்திப்புக் குறித்தோ எமக்குத் தெரியாது. அதுகுறித்து எமக்கு எவ்விதமான உத்தியோகபூர்வ அழைப்பும் கிடைக்கவில்லை" என்றார்.

இதேவேளை, ஜனாதிபதியுடனான சந்திப்பு மற்றும் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ள திட்டமிடல் சந்திப்பு தொடர்பாக தான் செல்வம், சித்தார்த்தன் ஆகியோருக்கு அறிவிப்பு விடுத்துள்ளதாக சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49