கிளிநொச்சி சிவகநகா் அ.த.க.பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யக்கோரியும் மாணவா்களும் பெற்றோர்களும் இன்று திங்கட்கிழமை காலை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கணிதம்,  விஞ்ஞானம், நடனம், உடற்கல்வி ஆசிரியா்கள் இடமாற்றம் பெற்றுச் சென்று ஆறுமாதங்கள் கடந்த போதும் இதுவரை  அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் இந்த நிலையில் அதிபருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது எனவும் முன்னேற்றமடைந்து செல்லும் எங்கள் பிரதேசத்தின் கல்வி வளா்ச்சியில்  மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பெற்றோா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

எனவே தான் பற்றாக்குறையாக  உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பிவிட்டு அதிபரை இடமாற்றம் செய்யுங்கள் எனக்  கோரிக்கை விடுத்ததோடு “ தற்போதைய ஆசிரியா் வெற்றிடத்தை நிரப்பும் வரை அதிபரை இடமாற்றம் செய்யவேண்டாம்“ , “தொடர் ஆசிரியர் இடமாற்றத்தினால் மணாவா்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றனர்“ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட  பெற்றோா் ஏந்தியிருந்தனா்.