இன்றைய திகதியில் எம்மில் பலரும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக உணவு முறையில் மட்டுமல்லாமல் உறக்கத்தின் கால அளவுகளிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் உடல் இயக்க வளர்ச்சிதை மாற்றத்திலும் சொல்ல இயலாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் நாளாந்தம் குறைந்தபட்சம் எட்டு மணி தியாலம் வரை தொடர்ச்சியாக உறங்க வேண்டும். அதனையும் உடலில் இயற்கையாக அமைந்திருக்கும் சுழற்சி கடிகார அமைப்பின் படி இரவு நேரத்தில் உறங்க வேண்டும். ஆனால் இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர்... குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் இரவில் பணியாற்றி.. பகலில் உறங்குகிறார்கள்.
இரவில் பணியாற்றுவதால் அகால நேரத்திலும், எளிதில் செரிமானமாகாத உணவுகளை பசியாறுகிறார்கள். இதன் காரணமாக இவர்கள் தூக்கமின்மை பாதிப்புகளுக்கு ஆளாவதுடன், செரிமான கோளாறு பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்கிறார்கள். பனிச்சுமையின் காரணமாக இவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும்... இத்தகைய பக்க விளைவுகளை தூண்டுகிறது என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மன அழுத்தம் ஏற்படும் போது உடலின் இயக்கம் மற்றும் வளர்சிதை மாற்றம் இயல்பான அளவை விட கூடுதலான அளவிற்கு மேற்கொள்ளும் வகையில் தூண்டல் நடைபெறுகிறது. இது செரிமான மண்டலத்திலும் நிகழ்வதால் சாப்பிட்டவுடன் குறுகிய கால அவகாசத்திற்குள் மீண்டும் பசி உணர்வு ஏற்படுகிறது. செரிமான மண்டலத்தில் ஏற்படும் சமசீரற்ற தன்மை காரணமாக வயிற்றுப்புண் உண்டாகுவதற்கான சாத்தியக்கூறும் அதிகமாகிறது.
எனவே மருத்துவர்கள் உறக்கத்தையும், உறங்கும் நேரத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், தூக்கமின்மை பாதிப்பையும், மன அழுத்த பாதிப்பையும் முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
டொக்டர் பிரசாந்த் கிருஷ்ணா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM