முகத்துக்கு பூசும் கிரீம் விவகாரம் : உயிரை மாய்த்துக்கொண்ட பாடசாலை மாணவி - தலவாக்கலையில் சம்பவம்

Published By: Digital Desk 3

06 May, 2023 | 01:27 PM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ட்றூப் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (5) மாலை பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தார்.

முகத்துக்கு பூசும் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் பதினொரு வயதுடைய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (5) மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

போயா தினம் என்பதால் அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆலயத்திற்கு செல்ல தயாராகும் போது அண்ணன் பயன்படுத்தும் கிரீமை தங்கை பயன்படுத்தியுள்ளார்.

 இதன்போது அண்ணன் தங்கையிடம். ஏன் எனது  கிரீமை போடுகின்றாய் என கேட்டுள்ளார்.

அதன் பின்னர் பாட்டியுடன் அண்ணன் ஆலயத்திற்கு செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்துகொள்ள வருவதற்கு மறுத்துள்ளார்.

இதையடுத்து பாட்டியும் அண்ணனும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து கொண்டு  ஆலயத்தில் வழங்கப்பட்ட ‌ அன்னதானத்தினை தங்கைக்கும் எடுத்துகொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது  அயலவர்கள் சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அண்ணன் மற்றும் பாட்டியும் வீட்டுக்கு வந்த போது தனது தங்கை தூக்கிட்டு இறந்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது, தனது தங்கையிடம்  எப்போதும் பேசுவது போல் பேசியதாகவும்,  இறந்த சகோதரியின் அண்ணனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58