தொழிற்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, நுகர்வோர் மத்தியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்த தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT MOBITELக்கு, அண்மையில் இடம்பெற்ற Effie விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரண்டு வெண்கல விருதுகள் மற்றும் மெரிட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
இணையம் / தொலைத்தொடர்புகள் பிரிவில் விருதுகளை வென்றிருந்த ஒரே தொடர்பாடல் சேவைகள் வழங்குநராக SLT-MOBITEL திகழ்ந்தது.
SLT-MOBITEL Fixed திட்டத்துக்கு மெரிட் விருது வழங்கப்பட்டிருந்தது. “SLT-MOBITEL Fibreஉடன் இணையத்தில் புரட்சி” எனும் தொனிப்பொருளின் கீழ் SLT-MOBITEL Fibreஇனால் முன்னெடுக்கப்பட்ட திட்டத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
அண்மையில் SLT-MOBITEL தனது Fibre வசதியை மேம்படுத்தியிருந்தது. இலங்கையின் முதலாவது, வேகமான மற்றும் பரந்த முன்னணி இணைப்புத்திறன் பான்ட்வித் 200 Mbps வரை டவுன்லோட் வேகத்தையும் 100Mbps வேகத்தையும் வழங்குவதாக அமைந்துள்ளது.
பாவனையாளர்களுக்கு வாடிக்கையாளர் அனுபவத்தை தடங்கல் இல்லாத வகையிலும், ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் உடனடியாக டவுன்லோட் மற்றும் அப்லோட் செய்யும் வசதியையும் வழங்குவதாக அமைந்துள்ளது.
அத்துடன், SLT-MOBITEL Fibre பாவனையாளர்களுக்கு வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வது அல்லது Ultra HDஇல் இதர நேரடி வீடியோக்களை பார்வையிடுவதற்கும், கேமிங்களில் குறைந்த latency அனுபவிக்கவும், PeoTVகளுக்கு தெளிவான UHD படத் தரத்தை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக SLT-MOBITELஉடன் Phoenix Ogilvy கைகோர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM