சூழலுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து வந்த பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்படவுள்ளது. பொலித்தீன்  பாவனை அதிகரித்துள்ளதனால் சூழல் மாசடைந்ததுடன் நாய், மாடு, யானை கூட குப்பை மேடுகளில் வீசப்படும் பொலித்தீனை உண்ணுகின்றன. சுற்றுலா இடங்களையும் இவை ஆக்கிரமித்துள்ளன. இவற்றை மட்டுமன்றி பொதுச் சுகாதாரத்தையும் கவனத்தில் கொண்டு பொலித்தீன்  தடை செய்யப்படவுள்ளது.

ஆனால் பொலித்தீன்  பொது மக்களுக்கு இன்றியமையாததாகவுள்ளது. இந்த நிலையில் இதற்கான மாற்றீடு பற்றி வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. முன்னர் போல் கடதாசி பேக்குகளே பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பன் பேக்குகள் மீண்டும் பாவனைக்கு கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.