(எம்.எம்.சில்வெஸ்டர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள கரப்பந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம் மற்றும் கபடி ஆகிய விளையாட்டுகளுக்கான தங்குமுகாம் பயிற்சி வேலைத்திட்டத்தில் வீர, வீராங்கனைகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 8ஆம் திகதியன்று காலை 9 மணிக்கு மஹரகமவில் உள்ள இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
நேர்முகப் பரீட்சையின்போது தெரிவுசெய்யப்படுபவர்கள், தங்குமுகாம் பயிற்சி காலத்தின்போது, தங்குமிட வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் என்பன இலவசமாக கொடுக்கப்படும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் குறிப்பிடுகிறது.
கரப்பந்தாட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்ட குழாம்களில் இணைவதற்கு எதிர்பார்த்துள்ள ஆண்கள் 20 வயதுக்குட்பட்ட 182 சென்ரீ மீற்றர் உயரத்தை உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல், பெண்கள் 20 வயதுக்குட்பட்ட 172 சென்ரீ மீற்றர் உயரத்தை உடையவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கபடி குழாமில் இணைவதற்கு எதிர்பார்த்து உள்ளவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியதுடன், ஆண்கள் 175 சென்ரீ மீற்றர் உயரத்தையும், பெண்கள் 172 சென்ரீ மீற்றர் உயரத்தையும் உடையவர்களாக இருப்பது கட்டாயமாகும். அத்துடன், க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி பயின்றிருப்பது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு 07773852202, 0112851168 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ளவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM