(நெவில் அன்தனி)
ஹைதராபத்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் கடைசி ஓவரை வருண் சக்கரவர்த்தி மிகவும் சாமர்த்தியமாக வீசியதன் பலனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸினால் நிர்ணியிக்கப்பட்ட 172 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட, சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மிகவும் சாமர்த்தியமாக பந்துவீசி ஒரு வீக்கெட்டைக் கைப்பற்றியதுடன் ஒரு உதிரி உட்பட 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.
இப் போட்டியில் சவால் மிக்க சந்தர்ப்பங்களில் 4 ஓவர்களை வீசி 20 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட்டை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், தென் ஆபிரிக்கர்களான ஏய்டன் மார்க் ராமும் ஹென்றி க்ளாசெனும் 5ஆவது விக்கெட்டில் 79 ஒட்டங்களைப் பகிர்ந்து அணியை ஒரளவு பலப்படுத்தினர்.
எனினும் 17ஆவது ஓவரில் மார்க்ராம் களம் விட்டகன்றதும் ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
கொல்கத்தாவின் முன்வரிசை வீரர்கள் மூவர் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 35 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் அணித் தலைவர் நிட்டிஷ் ராணா, ரின்கு சிங் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவைத் தடுத்தனர். தொடர்ந்து அண்ட்ரே ரசல், அனுக்குல் ரோய் ஆகிய இருவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
எண்ணிக்கை சுருக்கம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 171 - 9 விக். (ரின்கு சிங் 46, நிட்டிஷ் ராணா 42, அண்ட்றே ரசல் 24, ஜேசன் ரோய் 20, அனுக்குல் ரோய் 13 ஆ.இ., மார்க்கோ ஜென்சன் 24 - 2 விக்., தங்கராசு நடராஜன் 30 - 2 விக்.)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 166 - 8 விக். (ஏய்டன் மார்க்ராம் 41, ஹென்றி க்ளாசென் 36, அப்துல் சமாத் 21, ராகுல் திரிபாதி 20, மயான்க் அகர்வால் 18, ஷர்துல் தக்கூர் 23 - 2 விக்., வைப் அரோரா 32 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM