(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்ட மக்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான சகல முயற்சிகளுக்கு நாம் எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
மே தினத்தன்று பதுளையில் இடம்பெற்ற கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் அண்மையில் இடம்பெற்ற போது , 'மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி மலையத்திலும் , தலைநகரிலும் இரு மே தினக் கூட்டங்களை நடத்தியதைப் போன்று இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியும் இரு மே தினக் கூட்டங்களை நடத்த வேண்டும்.' என்ற கோரிக்கையை வடிவேல் சுரேஷ் முன்வைத்தார்.
அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினுடைய அனுமதியுடன் சமிந்த விஜேசிறி, வேலுகுமார் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் பதுளையில் எமது மே தினக் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் , இந்த அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கு இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
பேராதனை பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கணிப்பீட்டுக்கமைய ஒரு சாதாரண மனிதன் இலங்கையில் தற்போதுள்ள நிலைமையில் தனது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதற்கு நாளொன்றுக்கு 3250 ரூபாவை சம்பளமாகப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதே போன்று இதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பொன்றில் எதிர்க்கட்சி தலைவருக்கு பங்குபற்ற முடியாத நிலைமை ஏற்பட்டமையால் , பிரிதொரு சந்தர்ப்பத்தில் அவர் நிச்சயம் அம்மக்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். அதற்கு எதிர்க்கட்சி தலைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே இவ்விவகாரத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லை.
இதற்காக வடிவேல் சுரேஷ் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகக் கூறவில்லை. அவர் அவ்வாறு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் பெருந்தோட்ட மக்களின் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான சகல முயற்சிகளுக்கும் நாம் எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM