தெற்கு ஆசியாவில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், இதே வேகத்தில் சென்றால் தெற்கு ஆசியாவில் சிறுவர் திருமணத்தை ஒழிப்பதற்கு மேலும் 55 ஆண்டுகள் செல்லும் என யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் தற்போதைய வேகத்தில் சிறுவர் திருமணத்தை ஒழிப்பதற்கு மேலும் 300 ஆண்டுகள் செல்லும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தெற்காசியாவில் இதற்கு 55 ஆண்டுகள் செல்லும் எனவும் யுனிசெப்பின் தெற்காசிய பிரிவு தெரிவித்துள்ளது.
யுனிசெப்பின் தெற்கு ஆசியப் பிரிவு இது தொடர்பாக நேற்று (03) விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தெற்கு ஆசியாவில் சிறுவர் திருமணம் சீராக குறைந்த வருகிறது. தெற்கு ஆசியாவில் சிறுமிகள் திருமணம் செய்வது 46 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் அதிகமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ், மாலைதீவுகள், பாகிஸ்தானிலும் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனினும், உலகின சிறுவர் திருமணத்தில் ஏறத்தாழ அரைவாசி (45 சதவீதம்) இப்பிராந்தியத்தில் நடக்கிறது. இந்தியாவில் சிறுவர் திருமணத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், உலகில் நடைபெறும் சிறுவர் திருமணத்தில் மூன்றிலொரு பங்கு இந்தியாவில் நடந்துள்ளது. உலகில் தற்போது உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களில் 640 மில்லியன் பேர் சிறுவர் பராயத்தில் திருமணம் செய்தவர்களாக உள்ளனர். அவர்களில் 290 மில்லியன் பேர் தெற்காசியாவில் உள்ளனர் என அண்மைய மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தெற்கு ஆசியாவில் பங்களாதேஷில் சிறுவர் திருமணங்களின் சதவீதம் பங்களாதேஷில் சிறுவர் திருமணங்களின் சதவீதம் அதிகமாக (50 சதவீதத்துக்கும் அதிகம்) உள்ளது. ஆகக் குறைவாக மாலைதீவுகளில் 2 சதவீதமாக உள்ளது.
தெற்காசியாவில் சிறுவயதில் திருமணம் செய்த பெண்கள் அதிகமாக வறிய குடும்பங்களில் உள்ளதுடன், குறைந்த கல்வியறிவு கொண்டவர்களாகவும் தூரப்பிரதேசங்களில் வசிப்பவர்களாகவும் உள்ளனர். உதாரணமாக பாகிஸ்தானிலுள்ள சிறுவயதில் திருமணம் செய்த பெண்களில் நான்கில் ஒரு பங்கினர் ஒரு போதும் பாடசாலைக்குச் சென்றதில்லை.
சிறுவயதில் திருமணம் செய்த சிறுமிகள், உடனடி மற்றும் ஆயுட்கால பின்விளைவுகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பாடசாலைக் கல்வியை தொடர்வதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது. ஆரம்ப காலத்திலேயே கருத்தரித்தல், அதனால் பிரசவ சிக்கல்கள் மற்றும் மரணவீதம் அதிகரித்தலை எதிர்கொள்கின்றனர்.
இத்திருமணங்கள் சிறுமிகளை அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தக்கூடு;ம். இதனால், அவர்களின் உளவியல் ஆரோக்கியம் மற்றும் நலன்களில் கடும் பாதிப்பை எற்படுத்துகிறது எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM